Saturday, November 21, 2015

Psychoanalysis - Sigmund Freud's Theory

இறைவனின் படைப்பினில் சிறந்தது மானிட படைப்பே. அனைத்து ஜீவராசிகளிலும் சிறந்தது தலைமையானது மானுட இனமே. மானுடவியலைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை நிரூபித்துள்ளனர்.

பொதுவாக மனிதனுக்கு அகம் , புறம் என இரு உடல்கள் உண்டு என்பர். அதில் புறம் என்பது இந்த ஸ்தூல உலகத்தினால் கண்களால் பார்க்கக் கூடிய புற உடல் ஆகும்.

அகம் என்பது மனதைக் குறிக்கும். மனம் கண்ணாடிப் போன்றது. கண்ணாடி எதை உள்வாங்குகிறதோ அதையே பிரதிபலிக்கும். மனித மனமும் அதை போலவே உள்ளீடுகளைப் பொறுத்தே அதாவது சிந்தனையைப் பொறுத்தே செயலும் இருக்கும்.

இவ்வாறு கற்பனைகளுக்கு எட்டாத சிந்தனைகளின் பிறப்பிடமான, பல ரகசியங்களின் காப்பிடமான மனதைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு தொகுப்பமைவுகளை அளித்த போதிலும் சிக்மண்ட் பிராய்ட் என்ற உளநோய் மருத்துவர்  நிறுவிய உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.

சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்'           ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல் கல் ஆகும். இது இயக்கவியல் உளவியல் மனிதரில் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதாகும்.பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் சிக்மன்ட் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்.
சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். அவை,
  1. உணர்வு மனம் (Conscious Mind)
  2. உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind)
  3. தொலை நோக்கு மனம்
கவிஞர்களும் சிந்தனையாளர்களும் உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் அதிகம் உண்டு என்று இவர் கண்டறிந்து கூறியதாலும் இவர் புகழ்பெற்றார். மேலும் மானிடரின் குண இயல்புகள் பின்வரும் மூன்று சூழ்நிலை உணர்வுகளாலேயே ஏற்படுகிறது என்றும் கூறினார். அவை,
  1. உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id)
  2. முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego)
  3. மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego)
இந்த மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை நிர்மானிக்கும் என்று கூறினார்.

சரி,  இவரைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறதா?

இதோ கீழ் வரும் பாடல் வரிகளை கூர்ந்து கவனியுங்கள் !

"உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில் நூறு அவதாரம்
முகங்களை உரித்து மனங்களை படித்து
பேரு கொண்டே அறிவு கொண்டான் விஞ்ஞானி பிராய்டும் புரிந்து கொண்டான் "

இது தசாவதார பட பாடல். இதில் விஞ்ஞானி பிராய்ட் பற்றி கூறப்பட்டதற்கான காரணம்.
மனித மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணங்களுக்கும், ஓர் குணம் உள்ளது. அது நல்லது, கெட்டது, அன்பு, இரக்கம், வக்கிரம் என எதனையும் அடிப்படையாக கொண்டும் இருக்கலாம்.
மனித மனதிற்குள் ஒவ்வொரு நொடியும் கூட இந்த குணங்களுக்கு இடையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும். இறுதியில் எந்த குணத்தின் ஆளுமை திறன் அதிகமாக இருக்கிறதோ அதுவே மற்ற குணங்களை விட முந்தி கொண்டு வெளிப்படும். அதுவும், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாறக்கூடும்.

இந்த குணங்கள் அனைத்தும் மனித உருவத்துடன் வெளிப்பட்டதே அவதாரம். நாம் ஒவ்வொருவரும் கூட நமது  இயல்பான வாழ்க்கையில் பல்வேறு அவதாரங்களை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். சிலரிடம் அன்பாக, சிலரிடம் கடமையுள்ளவனாக, சிலரிடம் வன்மமாக என பல்வேறு அவதாரங்கள் நம்மிடம் இருந்து உறுப்பெறுகின்றன.












Monday, August 31, 2015

Varalakshmi Vratham Aug 28, 2015

இன்று ஆவணி மாதம் 12 ம் நாள் வெள்ளி கிழமை, வரலட்சுமி விரதம் அனைத்து சுமங்கலி பெண்களாலும் மேற்கொள்ளப்படுகிறது.
       பொதுவாக இந்த விரதமானது ஷ்ரவண சுக்ல சுகர வாரம் அதாவது பௌர்ணமிக்கு அடுத்து வரும் வெள்ளி கிழமைகளில் சுமங்கலி பெண்களால் தங்கள் கணவர்மார் உடல் நலத்துடனும், மனநலத்துடனும், நீண்ட ஆயுளோடும் , செல்வ செழிப்போடும், தம் பரம்பரை செழித்து விளங்கவும் மேற்கொள்ளப்படுகிறது.
        இந்த விரதத்தை பற்றி சிவபெருமானே கந்த புராணத்தில் எடுத்துரைத்துள்ளார்.

விரத வழி முறைகள்:
        முதல் நாளே வீட்டை சுத்தப்படுத்தி பூஜைக்கு தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
        மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு அல்லது பிரம்ம முஹூர்த்தம் எனப்படும் அதி காலை 4:30 மணிக்கு கலசத்தை வைக்க வேண்டும் அல்லது நல்ல நேரம் பார்த்தும் கலசத்தை ஸ்தாபனம் செய்யலாம்.

கலசத்தை அலங்கரிக்கும் முறைகள்:

        செப்பு, வெள்ளி அல்லது பித்தளை செம்பு = அதற்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வெள்ளை திரி நூலால் பின்னி அலங்கரித்து கொள்ள வேண்டும். பின் அதனுள் அரிசி பருப்பு அல்லது நீரை நிரப்பி ,         9 மஞ்சள் கிழங்கு, 9 கொட்டை பாக்கு, 9 வெற்றிலை, 9 நாணயங்கள், தங்கம் வெள்ளி காசுகள் அல்லது நகைகள், மஞ்சள் கயிறு, குங்குமம் கண்ணாடி வளையல்கள், சீப்பு , சிறு கண்ணாடி இட்டு அதன் மீது மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரித்த கலச தேங்காயை வைத்து கலசத்தின் வாய் பகுதியை மூட வேண்டும்.  தேங்காயை சுற்றிலும் மாவிலைகளை செருகி வைக்கலாம்.
            கலசத்தை வைப்பதற்கு முன் வீடு வாசலில் கோலமிட்டு அலங்கரித்து மாவிலை தோரணம் கட்டி சாம்பிராணி தூபம் போட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
பின் பூஜை அறையில் மாகோலமிட்டு , அதன் மீது மனை பலகை வைத்து, அதில் ஒரு தாம்பூல தட்டில் அரிசியை பரப்பி அதன் மீது கலசத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் வைத்தும் அலங்கரிக்கலாம் அல்லது கும்பத்தை புடவை அல்லது ரவிக்கை துணி சுற்றியும் அவரவர் வசதிக்கு ஏற்ப அலங்கரிக்கலாம். கலசத்தின் கழுத்து பகுதியில் ஆபரணங்களை அணிவிக்கலாம், முக்கியமாக அம்மனுக்கு மஞ்சள் தாலியை அணிவிக்க வேண்டும்.
           பின் ஒரு சிறு வாழை இலையில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து குங்குமம் இட்டு  ஊதுபத்தி கற்பூர தீபமேற்றி , முழு முதற் கடவுளான, விநாயகர் வழிபாடல் செய்து, பூஜை தடையின்றி நடக்க வேண்டிக்கொள்ள வேண்டும் .
        பின் பூஜைக்கான அனைத்து வேலைகளையும் ஆரம்பிக்கலாம். நைவேத்தியத்திற்கான பக்ஷணங்களை செய்ய ஆரம்பிக்கலாம். மாலையில் குத்து விளக்கேற்றி மலர்களால் அலங்கரித்து, குல தெய்வ வழிபாட்டுடன், லக்ஷ்மி பாடல்கள் பாடியும் ஸ்லோகங்கள் சொல்லியும் , வழிபாடு செய்யலாம்,  பக்ஷணங்களுடன் 9 பழங்களையும் நிவேதனம் செய்து அருகில் உள்ள சுமங்கலி பெண்களை அழைத்து வெற்றிலை பாக்குடன் மஞ்சள் குங்குமம், மாங்கல்ய கயிறு, கண்ணாடி வளையல்கள் முடிந்தால் ரவிக்கை துணி கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளலாம். வீட்டிற்கு வந்த சுமங்கலிகள் உண்ட பின்பே நாமும் உண்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.
      இந்த பூஜையும் புனஸ்காரமும் தத்தம் தகுதிக்கேற்ப இருக்க வேண்டுமே ஒழிய ஊர் மெச்ச ஆடம்பரமாக செய்ய அகலக்கால் வைக்க கூடாது. "மலையளவு கொடுக்குற சாமிக்கு கடுகளவு கற்பூரம் காட்டினாலும் போதும் ."
      மேலும் வழிபாடு முறைகள் அனைத்தும் மற்றவரும் மேற்கொள்ளும் ஆசையை தூண்ட வேண்டுமே ஒழிய பார்த்து பயந்து ஒதுங்கும் அளவிற்கு இருக்க கூடாது. ஆயிரம் பெண்களின் ஆசிர்வாதத்தை விட கட்டிய கணவனின் ஆசிர்வாதமே பெரிது. சிவனின் இடப்பாகத்தில் சக்தியாக இருக்கும் பெண்கள் நாம் இதை என்றும் மறவாது இருக்க வேண்டும்.











Tuesday, August 25, 2015

Today My Son's Birthday And Its My First Post for this Blog

Today 26th August, My Son Tino's 6th Birthday. And Its my First Post in this Blog that Iam started writing for this Blog. I assure that I will represent this as best blog with positive attitudes. Do follow this Blog.

இந்த போட்டோ திருப்பதியில் காளி கோபுரம் அருகே எடுக்கப்பட்டது . கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடை பயணமாக சென்றபோது எடுக்கப்பட்ட படம். அப்போது அவனுக்கு வயது 2 கூட முடியவில்லை . சுருளான முடி, துறு துறு பார்வை , சாந்தமான முகம் , தெளிவான பேச்சு எப்போதுமே என் மகனுக்கு அழகு தான் .

அவன் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் நலமாகவும் , வளமாகவும் , அறிவுள்ள சிறந்த மகவாக திகழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.