இறைவனின் படைப்பினில் சிறந்தது மானிட படைப்பே. அனைத்து ஜீவராசிகளிலும் சிறந்தது தலைமையானது மானுட இனமே. மானுடவியலைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை நிரூபித்துள்ளனர்.
பொதுவாக மனிதனுக்கு அகம் , புறம் என இரு உடல்கள் உண்டு என்பர். அதில் புறம் என்பது இந்த ஸ்தூல உலகத்தினால் கண்களால் பார்க்கக் கூடிய புற உடல் ஆகும்.
அகம் என்பது மனதைக் குறிக்கும். மனம் கண்ணாடிப் போன்றது. கண்ணாடி எதை உள்வாங்குகிறதோ அதையே பிரதிபலிக்கும். மனித மனமும் அதை போலவே உள்ளீடுகளைப் பொறுத்தே அதாவது சிந்தனையைப் பொறுத்தே செயலும் இருக்கும்.
இவ்வாறு கற்பனைகளுக்கு எட்டாத சிந்தனைகளின் பிறப்பிடமான, பல ரகசியங்களின் காப்பிடமான மனதைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு தொகுப்பமைவுகளை அளித்த போதிலும் சிக்மண்ட் பிராய்ட் என்ற உளநோய் மருத்துவர் நிறுவிய உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.
சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல் கல் ஆகும். இது இயக்கவியல் உளவியல் மனிதரில் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதாகும்.பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் சிக்மன்ட் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்.
சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். அவை,
சரி, இவரைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறதா?
இதோ கீழ் வரும் பாடல் வரிகளை கூர்ந்து கவனியுங்கள் !
"உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில் நூறு அவதாரம்
முகங்களை உரித்து மனங்களை படித்து
பேரு கொண்டே அறிவு கொண்டான் விஞ்ஞானி பிராய்டும் புரிந்து கொண்டான் "
இது தசாவதார பட பாடல். இதில் விஞ்ஞானி பிராய்ட் பற்றி கூறப்பட்டதற்கான காரணம்.
மனித மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணங்களுக்கும், ஓர் குணம் உள்ளது. அது நல்லது, கெட்டது, அன்பு, இரக்கம், வக்கிரம் என எதனையும் அடிப்படையாக கொண்டும் இருக்கலாம்.
மனித மனதிற்குள் ஒவ்வொரு நொடியும் கூட இந்த குணங்களுக்கு இடையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும். இறுதியில் எந்த குணத்தின் ஆளுமை திறன் அதிகமாக இருக்கிறதோ அதுவே மற்ற குணங்களை விட முந்தி கொண்டு வெளிப்படும். அதுவும், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாறக்கூடும்.
இந்த குணங்கள் அனைத்தும் மனித உருவத்துடன் வெளிப்பட்டதே அவதாரம். நாம் ஒவ்வொருவரும் கூட நமது இயல்பான வாழ்க்கையில் பல்வேறு அவதாரங்களை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். சிலரிடம் அன்பாக, சிலரிடம் கடமையுள்ளவனாக, சிலரிடம் வன்மமாக என பல்வேறு அவதாரங்கள் நம்மிடம் இருந்து உறுப்பெறுகின்றன.

- உணர்வு மனம் (Conscious Mind)
- உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind)
- தொலை நோக்கு மனம்
- உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id)
- முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego)
- மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego)
சரி, இவரைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறதா?
இதோ கீழ் வரும் பாடல் வரிகளை கூர்ந்து கவனியுங்கள் !
"உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில் நூறு அவதாரம்
முகங்களை உரித்து மனங்களை படித்து
பேரு கொண்டே அறிவு கொண்டான் விஞ்ஞானி பிராய்டும் புரிந்து கொண்டான் "
இது தசாவதார பட பாடல். இதில் விஞ்ஞானி பிராய்ட் பற்றி கூறப்பட்டதற்கான காரணம்.
மனித மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணங்களுக்கும், ஓர் குணம் உள்ளது. அது நல்லது, கெட்டது, அன்பு, இரக்கம், வக்கிரம் என எதனையும் அடிப்படையாக கொண்டும் இருக்கலாம்.
மனித மனதிற்குள் ஒவ்வொரு நொடியும் கூட இந்த குணங்களுக்கு இடையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும். இறுதியில் எந்த குணத்தின் ஆளுமை திறன் அதிகமாக இருக்கிறதோ அதுவே மற்ற குணங்களை விட முந்தி கொண்டு வெளிப்படும். அதுவும், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாறக்கூடும்.
இந்த குணங்கள் அனைத்தும் மனித உருவத்துடன் வெளிப்பட்டதே அவதாரம். நாம் ஒவ்வொருவரும் கூட நமது இயல்பான வாழ்க்கையில் பல்வேறு அவதாரங்களை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். சிலரிடம் அன்பாக, சிலரிடம் கடமையுள்ளவனாக, சிலரிடம் வன்மமாக என பல்வேறு அவதாரங்கள் நம்மிடம் இருந்து உறுப்பெறுகின்றன.
No comments:
Post a Comment